Monday, 22 August 2011


படித்ததில் பிடித்தது
=======================================
பெருந்தன்மை கோழைத் தனமல்ல.
                                  --மதுரை பாபாராஜ்
=======================================
நல்ல மனதும் நல்ல சிந்தனையும் இருந்தால்
வாழ்க்கை நன்றாக அமையும்.
========================================
நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது
நீதான் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக நினை.
துன்பம் வரும்போது உனது துன்பம்
மற்றவர்களைவிட சிறியது என நினைத்துக்கொள்

நன்றி:வாழ்க்கை வழிகாட்டிகள்
==========================================
விடைபெறும் வேளைகளில் அன்பான வார்த்தைகளே
பேசுங்கள்.ஒருவேளை நீங்கள் வழ்வில் மறுபடி
சந்திக்காமலே இருக்கவும் கூடும்.

                                      ---விக்டர்
===============================================
அப்துல் கலாம் அவர்களுக்கு ஒரு மகான் கூறியது:
===============================================
உனக்கு வாழ்க்கையில் எதிர்பார்த்தது நிறவேறவில்லை என்றால்
நீ வேறு எதற்காகவோ படைக்கப்பட்டிருக்கின்றாய் என்று அர்த்தம்.
வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொள்.
========================================================
தனிமனித ஒழுக்கம் தலைநிமிர வைக்கும்
                                                            --மதுரை பாபாராஜ்.
=======================================================
வலிமை வாய்ந்தது மனம்.
==================================================
யாரிடமும் அதிக எதிர்பார்ப்போ அதிகமாக உணர்ச்சிவசப்
படுதலோ குழம்பிக்கொண்டே இருத்தலோ இவற்றை எல்லாம்
தவிர்த்தாலே மனம் திண்மையாக மாறும்.
============================================================
மரணத்தின் தறுவாயில் சாக்ரடீஸ் கூறியவை:
============================================
உயிரோடிருக்கும்போது மனசாட்சியை மதிக்காமல்
உண்மைக்குப் போராடாமல் இருப்பது மோசமானது
என்பது மட்டும் எனக்குத் தெரியும்.
============================================================
தவறுகளை ஒப்புக்கொள்ளும் துணிவும் அவ்ற்றை
திருத்திக் கொள்வதற்கான விருப்பமும் தான் வெற்றி
பெறுவதற்கான அறிகுறிகள்.
                              வி.இ.லெனின்
==============================================================

Friday, 19 August 2011

படித்ததில் பிடித்தது!

====================
எடுத்துவைக்கும் அடிகள் சிறியதாக இருக்கலாம்.ஆனால்
இருக்கவேண்டும்
=============================================
எடுத்துவைக்கும் அடிகள் சிகரத்தை நோக்கி.உங்களிடம்
நினைவுகொள்
இருக்கும் எல்லாமே தொலைந்துவிட்டாலும்:எதிர்காலம் என்ற ஒன்று எப்போதும் இருக்கிறது.அதில்
===================================================
எந்த அற்புதம் வேண்டுமானலும் நிகழலாம்.நினைத்ததைவிட அதிகமாகவே அடைந்திருக்கின்றேன்.நினைப்பதைவிட
=====================================================
அதிகமாகவே அடைவேன்.இது சத்தியம்.எதை ஊன்றி நினைக்கின்றாயோ நீ அதுவாகவே ஆகிறாய்.அதன்பின்
=====================================================
அடைதல் ஏது?இது தத்துவார்த்தம்.வாழ்கிறவரை உன்னைக் காப்பதற்காக வழ்வேன்.வீழ்கிறபோது உன்னை சேதப்படுத்தாமல் வீழ்வேன்.இதுதான்
========================================================
உண்மையான அன்பு.இழப்பதற்கு உயிரைத் தவிர வேறொன்றுமில்லை.ஆனால்
========================================================
அடைவதற்கு இந்த உலகமே இருக்கிறது.நன்றியை வார்த்தைகளில் கூற வேண்டிய அவசியமில்லை.செயல்களில்தான்
==========================================================
காட்டவேண்டும்.தொகுப்பு:வசந்தா பாபாராஜ்

Tuesday, 2 August 2011

சிந்தனைப்பெட்டகம்



=====================
அன்பே மகிழ்ச்சி
ஆணவம் அழிக்கும்
இன்சொல் பேசு
ஈவது இன்பம்
உன்னை நீ உணர்
ஊக்கமே துணை
எண்ணம்போல் வாழ்க்கை
ஏமாற்றி வாழாதே
ஐயம் கொள்ளாதே
ஒழுக்கத்தைப் போற்று
ஓரவஞ்சனை செய்யாதே
ஔடதமாய் இரு.

--வசந்தா பாபாராஜ்
==========================